முடக்கப்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்கள் - ஊழியர்களுக்கான தகவல்!


யாழ்.நகரத்தின் முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் வதிவிடங்களில் உள்ள MOH அலுவலகங்களில் கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் பிசிஆர் பரிசோதனைகள் நடைபெற உள்ளதால் அந்தந்த இடங்களுக்கு குறிப்பிட்ட தினங்களில் சென்று தங்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பகுதியினர் யாழ்.வணிகர் கழகத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனவே, இதனைத் தவறவிடாது அந்ததந்த இடங்களுக்குச் சென்று தங்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் திருநெல்வேலிச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள கடைத்தொகுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 08.04.2021 அன்று காலை திருநெல்வேலிச் சந்தைப்பகுதியில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதையும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- சங்கானை பிரதான நூலகத்திற்கு அருகில் (தொலைபேசி இலக்கம்- 021 225 0732)

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- சாவகச்சேரி MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 227 0014)

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- நவீன சந்தைக் கட்டடம் (தொலைபேசி இலக்கம்- 021 222 2645)

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- காரைநகர் MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 225 1944)

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- ஊர்காவற்துறை MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 221 1660)

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 (மாலை 3.00 மணி) நல்லூர் MOH அலுவலகம் (கோண்டாவில் வைத்தியசாலைக்கு அருகில்) (தொலைபேசி இலக்கம்- 021 205 3702)

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- மானிப்பாய் பழைய சந்தை (தொலைபேசி இலக்கம்021 225 5248)

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021 காலை- வேலணை MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 221 1555)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

06.04.2021, 07.04.2021 காலை- உடுவில் MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 224 1183)

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

07.04.2021 காலை- மாதா கோவிலடி, பருத்தித்துறை வீதி, இருபாலை. (தொலைபேசி இலக்கம்- 021 223 1060)

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

07.04.2021 காலை தெல்லிப்பழை MOH அலுவலகம் (தொலைபேசி இலக்கம்- 021 224 1182)

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.