யாழில் மோதல் சம்பவம்!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்வாய் பகுதியில் நேற்று முன்தினம் இரண்டு குழுவினர் இடையே இடம்பெற்றிருந்த இந்த மோதலில் 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இரு குழுக்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.