யாழ். போதனா வைத்தியசாலையில் சுமந்திரன் மற்றும் சிறிதரன்!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை விஜயம் செய்த அவர்கள் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா உள்ளிட்ட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன், நிலவும் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன், வைத்தியசாலை விடுதிகளையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.