அன்னதானத்தில் பங்கேற்ற ஜனாதிபதி!


கிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, ஆசிரமம் மற்றும் தியான பூங்கா திறப்புவிழாவை முன்னிட்டு இன்று விகாரையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார்.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மற்றும் பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு விசேட செயலணியின் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சமயக் கிரியைகளில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார்.

சங்கைக்குரிய உடுவே தம்மாலோக்க தேரரின் பிறந்த நாள் மற்றும் நாளைய தினம் இடம்பெறும் தேரரின் தாயாரின் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் அளிப்பதும் இந்த அன்னதான நிகழ்வின் மற்றுமொரு நோக்கமாகும்.

அன்னதான நிகழ்வு மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர்களான சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், அமரபுர மகாநிக்காயவின் அனுநாயக்க தேரர், கிருலப்பனை எலன் மெத்தினியாராம விகாராதிபதி சங்கைக்குரிய யோகியானே சோபித்த தேரர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மல்வத்தைப் பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.

நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்ணான்டோ, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.