கிளிநொச்சியில் இளைஞன் தற்கொலை!


கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் வீட்டின் பின்பகுதியின் கூரையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.