கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கொடூர கொலை!கிளிநொச்சியில் மாமனாரால் மருமகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து மருமகனை கொன்ற மாமனார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெ.ரவிச்சந்திரன் (36) என்ற நபரே உயிரிழந்துள்ளார். கணவன், மனைவிக்கிடையில் குடும்ப மோதல் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த மனைவியின் தந்தை, சம்பவத்தில தலையிட்டுள்ளார்.

இதன்போது, மாமனாருக்கும், மருகனிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, கைகலப்பு உருவானதை அடுத்து மருமகனை, மாமனார் அடித்து கொன்றுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.