நைட் ரைடர்ஸ் அணிக்கு 10 ஓட்டங்களால் வெற்றி


 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

188 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிட்டிஸ் ரானா தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.