மாநகர முதல்வரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி...!


கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து உலக மக்களுக்கும் கொவிட் பெரும் தொற்றுக் காரணமாக ஒரு துரதிஸ்டவசமாக ஏமாற்றம் நிறைந்த ஆண்டாக கடந்து சென்று விட்டது.

மலரும் பிலவ வருடம் நோய் நொடிகளில் இருந்து விடுபட்டு தமிழ்மக்கள் உரிமைகளைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நான் மாநகரத்தின் பொறுப்பை இவ்வாண்டு தை மாதமளவில் ஏற்றுக்கொண்டிருந்தேன். பல்வேறு நெருக்கடிக்கள் அழுத்தங்கள் மற்றும் கைது ஆகியவற்றுக்கு மத்தியிலும் எனது பயணம் உறுதியுடன் தொடர்கின்றது. இந்த மாநகரத்தை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு என்னால் ஆன சகல முயற்சிகளையும் முன்னெடுப்பேன். மாநகர மக்கள் அனைவரும் எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமல்லாது பக்க பலமாகவும் உறுதுணையாகவும் என்னுடன் இருக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் வேண்டுகின்றேன்.
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
மாநகர முதல்வர்
யாழ்.மாநகர சபை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.