ஊடகங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அனுமதியில்லை!
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரான ஜெனரல் கமால் குணரத்னவால் இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிட வேண்டுமாயின், ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் தனியாகக் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘ஊடகங்களுக்கு விடயங்களை அறிக்கையிடல்’ என்ற தலைப்பின் கீழ் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை