புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை


நாட்டில் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளாந்த எரிபொருள் பாவனை 4,500 மெட்ரிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக, தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.