தமிழ் தேசியம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் இருக்கும்!


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலை எழுதிய கவிஞர் தாமரை அந்தப் பாடல் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

தாமரை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது,

“தமிழர் திருநாளாம் இந்நன்னாளில் மற்றுமோர் நற்செய்தி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கும் 'மூப்பில்லா தமிழே தாயே' என்கிற தனிப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன் ரகுமான் திடீரென்று அழைத்தார்.

தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும்/உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான, . தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது. நீங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார்.

எழுதினேன், விரைவில் வெளியாக இருக்கிறது. 'புயல் தாண்டியே விடியல்' என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக 'மூப்பில்லா தமிழே தாயே' என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்.

இறுதி வடிவத்தில் நானும் இன்னும் கேட்கவில்லையாதலால் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். பாடல் வெளியாகும்போது அது தொடர்பான செய்திகளைப் பகிர்கிறேன். ( பாடல் எழுதுமுன்பு தமிழ், தமிழர் நலம் தொடர்பான உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்தது.

அதில் தமிழ்த்தேசியமும், அரசியலும், சமூகவியலும் அடக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. தமிழ்த்தேசியத்தில் கள அனுபவமும் எனக்கு உண்டு என்பதால் பல செய்திகளைப் பகிர்ந்தேன். அதை ஒட்டியே வரிகளையும் எழுதினேன். தயங்காமல் அள்ளி எடுத்துக் கொண்டார்.

பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். இன்றைய சூழலில் தமிழர்களை இசையால் இணைக்கும் கருப்பாடல் உருவானது.” இவ்வாறு பாடலாசிரியர் தாமரை தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.