வடக்கில் அவசர மூடக்கப்படும் பாடசாலை!


வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்று அவசரமாக மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரியே இவ்வாறு கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் மூடப்படுகின்றது.

நாளைய தினம்(05/04/2021) முதல், மறு அறிவித்தல்வரை குறித்த பாடசாலையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையையடுத்தே இவ்வாறு மூடப்படுவதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.