அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சந்திப்பு!📷


அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றையதினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். கொரோனா நோய்நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுடைய சுகாதார ரீதியிலான பாதுகாப்பு தொடர்பிலும் அவர்கள் எதிர்நோக்குகின்ற தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.