பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்!


பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் உயர் அட்மிரல் பிரபு பதவியில் இருந்த பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் அவருக்கு துப்பாக்கி வேட்டுக்களால் வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், பிலிப்பின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நியூசிலாந்து இராணுவம் நாளை ஞாயிற்றுக்கிழமை வெலிங்டனில் உள்ள பொயின்ற் ஜெர்னிங்ஹாமில் துப்பாக்கி வேட்டுக்கள் மூலம் மரியாதை செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.