விஜய்-ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படம்!!

 


தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது


இந்த நிலையில் ’தளபதி 66’ மற்றும் ‘தளபதி 67’ படங்களை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் வசித்து வருகிறது. அந்த வகையில் ’தளபதி 67’ படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜயுய்டன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது


தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் விஜய்யும், தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் ஒரே படத்தில் இணைவது மிகப்பெரிய வியாபாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் இந்த படம் ஒரு பான் - இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது


இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய படங்களுக்குப் பின் நான்காவது முறையாக விஜய்யுடன் அட்லி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.