பாதுகாப்பின் மத்தியில் சீயோன் தேவாலயத்தில் ஆராதனை!


 இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் திருப்பாடுகளின் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு இன்று (02.04.2021) மட்டக்களப்பு  சியோன் தேவாலயத்திலும் விசேட  ஆராதனைகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றன.

சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம் பெற்ற திருப்பாடுகளை நினைவு கூறும் விசேட ஆராதனைகள் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தலுடன் இடம்பெற்றது.

அதிகளவிலான இறைவிசுவாசிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான ஆராதனையில் இயோசுவின் திருப்பாடுகளை பறைசாற்றி நிற்கும் திருப்பாடல்கள் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, பிரதம போதகரின் பிரசங்கம் இடம் பெற்றதனைத் தொடர்ந்து விசேட ஆராதனைகள் நிறைவடைந்தன.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த ஆராதனை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.