முகக்கவசம் அணியாத நடத்துனரிற்கு நீதிவான் அறிவுரை!


முகக்கவசம் அணியாமல் கடமையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் நடத்துனரை கடும் எச்சரிக்கை, அறிவுரையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும் ஆபத்தில் தள்ளுகிறார்கள் என நடத்துனருக்கு, திறந்த நீதிமன்றத்தில் அறிவுரை கூறினார் நீதிவான். ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் இன்று ஊர்காவற்துறை பகுதியில் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, முக்ககவசம் அணியாமல் வர்த்தக, பொது நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிற்கு அறிவுரை கூறப்பட்டது. இனிமேல் முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடினால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்போது, ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட இ.போ.ச பேருந்தில் பயணிகளும், நடத்துனரும் முகக்கவசம் அணியாமல் இருந்தது அவதானிக்கப்பட்டது.

அந்த பேருந்தை சுகாதார பிரவினர் வழிமறித்து, முக்ககவசம் அணியாமலிருந்த பயணிகளிற்கு அறிவுரை கூறினர். நடத்துனர் முகக்கவசம் அணிந்து, அதை நாடிக்கு கீழே இழுத்து விட்டிருந்தார்.

முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டியது குறித்து அவருக்கு விளக்கமளித்த போது, அவர் அதை ஏற்காமல் முரண்பட்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார், முகக்கவசம் அணியாமல் சுகாதார விதிமுறையை மீறியது உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். நீதிவான் கஜநிதிமாறன் சுமார் 30 நிமிடங்கள், நடத்துனருக்கு அறிவுரை கூறினார். வறிய மக்களே பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள்.

பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் சூழலை சேவையில் ஈடுபடும் சாரதியும், நடத்துனருமே உறுதி செய்ய வேண்டும். இப்படி பொறுப்பற்ற விதமாக செயற்படுபவர்கள் சமூகத்தையும் அபாயத்தில் தள்ளி, தமது பிள்ளைகளிற்கும் துரோகமிழைக்கிறார்கள் என காட்டமாக அறிவுரை கூறினார்.

போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார விதிமுறைகளை பேணுகிறார்களா என்பதற்கான பொறுப்பு சாரதியும், நடத்துனருமே என்பதையும் நீதிவான் சுட்டிக்காடடினார். வாயையும், மூக்கையும் மூடி அணிவது மட்டுமே முகக்கவசம். அவற்றை மூடாமல், நாடிக்கு அணிந்திருப்பதை, முகக்கவசமாக கருத முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

முதலாவது முறையென்பதால், நடத்துனர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாகவும், இன்னொரு சந்தர்ப்பம் இதுபோல நேர்ந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படுமென நீதிவான் சுட்டிக்காட்டி அவரை விடுவித்தார்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை சாரதியும், நடத்துனருமே உறுதி செய்ய வேண்டும், முகக்கவசம் அணியாத நடத்துனர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட விவகாரம் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தலைமை காரியாலயத்திற்கும் சுட்டிக்காட்டப்பட வேண்டுமென சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக் கொண்டார். நீதிவான் அதறகான உத்தரவை பிறப்பித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.