சுவிட்சர்லாந்தின் குகைக்குள் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!


 சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் தொடர்பில் பொலிசார் ஓராண்டுக்கு பிறகு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஆர்காவ் மண்டலத்தில் Bruggerberg பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றில் 24 வயதான Dejan Dups என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வழி போக்கர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 2020 ஏப்ரல் மாதம் பொலிசார் இளைஞர் Dejan Dups என்பவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்காவ் மண்டல பொலிசார் 22 வயதான சுவிஸ் இளைஞரை கைது செய்துள்ளனர்.

சுமார் ஓராண்டு காலமாக மாயமான நிலையிலேயே Dejan Dups குகை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

உடற்கூராய்வில் இளைஞர் Dejan Dups உடலில் காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்படவில்லை. இதனால் கைதான இளைஞருக்கும் Dejan Dups-கும் மிடையே மோதல் இருந்ததாக தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், குற்றத்தின் நோக்கமும் பின்னணியும் இன்னும் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு பின்னரே தெரிய வரும் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

இந்த வழக்கு தொடர்பில் பொலிசார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, மொத்தம் 9 பேர்கள் தகவல் அளித்துள்ளதாக கூறும் பொலிசார்,

அதுவே, இந்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய உதவியதாக தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.