இந்தியாவில் உயர்கல்வியை தொடர புலமைப் பரிசில்கள்!


 கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான  புலமைப் பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

 அதற்மைய நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் , மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம் , ராஜிவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் , பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம் என்பவற்றின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

 இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

 இவற்றை வழங்குதற்கு தகுதியான இலங்கை பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழங்களில் பட்டப்பிடிப்பு , பட்டப்பின் படிப்பு மற்றும் கலாநிதி பட்டங்களுக்கான கற்கையை தொடர்வதற்கு விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சுடன் கலந்தாலலோசிக்கப்படும்.

 அனைத்து புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம் , மாதாந்த அடிப்படை சலுகை கட்டணம் மற்றும் புத்தகங்கள் காகிதங்களுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும்.

 மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கும் , இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமான கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவனவும் , இவற்றை விட ஏனைய பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

 தேவையான மேலதிக தகவல்களை கல்சி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும். இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கல்வி அமைச்சு அல்லது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள முடியும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.