மக்களின் நடத்தைகளைப் பொறுத்தே அனைத்தும் உள்ளது!


 வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சரியான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வருவதற்கு முன் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து இலங்கை மக்களுக்கு நல்ல புரிதல் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அந்த புரிதல் இருப்பதால் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து குடிமக்களும் பணியாற்ற வேண்டும் என்றும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

மேலும், அடுத்த சில நாட்களில், இலங்கை மக்களின் நடத்தைகளைப் பொறுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையவும் அல்லது அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களுக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த அனைத்து பகுதிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.