சித்திரை நிலவு -சண்முகநாதன் சின்னராஜா !!
பாக்காமல் போறியே பாசம் உனக்கில்லையா
பாக்கும் வரை நானொரு பாட்டும் ஒன்று பாடவா
கூடாமல் மனதிலே ஒட்டும் ஆசையில்லையா
கூடுவிட்டு உசிரு போனால் கூட நீயும் வருவியா
பாடாகப் படுத்துறியே நெஞ்சில் ஈரமில்லையா
பக்குவமாய் எடுத்துக்கூறி பாவம் தான் பாப்பியா
நேர்கொண்ட விழிகளில் நூல்விடவும் வாறியா
நீளும் கொடியிலே அசையும் தென்றல் அழகம்மா
மாவாட்டிப் போறியே மனசாட்சியும் இல்லையா
மனமுடையும் வேளையில் நினைவு கூடவரலையா
தனியாக இருக்கையில் கனவேதும் வரலையா
தாளம் போடும் விரலுக்கு இரசனை கூடிவரலையா
பூக்காமல் பூக்கிறியே புன்னகையில் நீயம்மா
பொங்கும் பொங்கலுக்கு வெல்லமும் தாவம்மா
சித்திரை நிலவுக்கு சேலை உடுத்து காட்டம்மா
சிரிக்கும் சித்திரையே சித்திரம் போல் அசைந்துவா....
சண்முகநாதன் சின்னராஜா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை