அஜித்தின் செல்போனை விவகாரம் - ஆரியின் பதில்!

 


தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற போது தல அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு சென்று இருந்தார். அப்போது ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர் என்பதும் அவருடன் புகைப்படம் எடுக்கவும் செல்பி எடுக்கவும் முயற்சித்தனர் என்பதும் தெரிந்ததே


இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மிகுந்த அன்பு காரணமாக அஜித்துடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த செல்போனை அவர் பிடுங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு ஓட்டு போட்டு முடித்தவுடன் அவர் அந்த ரசிகரை அழைத்து செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு பொது இடத்தில் இதுமாதிரி செய்யக்கூடாது என்று அறிவுரையும் கூறினார். இதுகுறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் அஜித்தின் இந்த செயல் குறித்து பிக்பாஸ் வின்னர் ஆரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’தல அஜித் அவர்களை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அவர் செல்போனை அந்த ரசிகருக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு மன்னிப்புக் கேட்ட பண்பையும் அனைவரும் பார்க்க வேண்டும். ஒரு பிரபலம் என்றால் வெளியில் செல்லும்போது ரசிகர்களின் அதீத அன்பால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். ஆனால் தேர்தலின் போது அவர் மிகுந்த பொறுமையோடு, அவ்வளவு கூட்டத்திலும் அந்த ரசிகருக்கு அவர் அறிவுரை கூறி செல்போனை திருப்பிக் கொடுத்த பண்புக்கு உண்மையிலேயே அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஆரியின் இந்த வேற லெவல் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.