பாம் எண்ணெய்க்கான தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!


அரசாங்கத்தினால் பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சிற்றூண்டி உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கை சிற்றூண்டி உற்பத்தி சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.டி சூரிய குமார இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதனை பூர்த்தி செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.