கனடாவில் மாயமான 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!


 கனடாவில் 3 வயது சிறுவன் ஒருவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான்.

கிழக்கு ஒன்ராறியோவிலுள்ள ஒரு வனப்பகுதியில் தன் குடும்பத்தினர் வழக்கமாக மீன்பிடிக்கும் இடத்திற்கு தன் தாத்தாவான Chris Fisherஉடன் சென்றிருந்தான் JudeLeyton.

தாத்தா ஊஞ்சல் ஒன்றை செய்துகொண்டிருக்க, அவரது கவனம் சிதறிய நேரத்தில் Judeஎங்கோ சென்றுவிட்டான்.

அவனைக் காணாமல் பதறிய தாத்தா உடனே குடும்பத்தாருக்கு தகவலளிக்க, பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

100 பொலிசார், உள்ளூர் தன்னார்வலர்கள் என ஒரு கூட்டம், ஹெலிகொப்டர் மற்றும் ஆழ்கடல் நீந்துவோருடன் Judeஐத் தேடும் முயற்சியில் இறங்கியது.

ஒரு நாள், இரண்டு நாள் என நேரம் நீண்டுகொண்டே செல்ல, Judeஐக் கண்டுபிடிக்க இயலவில்லை.

மூன்று நாளாகியும் Jude கிடைக்காததால் நம்பிக்கையிழக்கும் ஒரு சூழல்.ஒரு மூன்று வயது குழந்தை, மூன்று நாட்கள் காட்டுக்குள் எப்படி சமாளிக்கும்?

குடும்பத்தினரை பயம் பிடித்துக்கொண்டாலும், மனதின் ஒரு ஓரத்தில் தங்கள் பிள்ளை கிடைத்துவிடமாட்டானா என ஒரு நப்பாசை. அப்படியிருக்கும் நேரத்தில், Const. Scott McNames (19) என்பவரது தலைமையிலானஒரு பொலிசார் குழு ஓரிடத்தில் Judeஐத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறது.

அப்போது, Scott கண்களில் ஒரு நீல நிற ஜாக்கெட் தெரிந்துள்ளது. உடனே தன் சகாக்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருக்கிறார் Scott.

சத்தமாக Judeஐ கூப்பிட்டுக்கொண்டே அவர்கள் செல்ல, அவன் அசையவேயில்லை என்றதும் ஒருவித பயத்துடனேயே அவன் அருகில் சென்றுள்ளனர் Scottம் சக பொலிசாரும்.

ஆனால், தாகமும் களைப்பும் கொண்டிருந்தாலும், Jude பத்திரமாக இருந்ததைக் கண்டதும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது Scott குழு.

கையில் குழந்தையுடன் அவர்கள் காட்டுக்குள்ளிருந்து வந்ததும், அவன் பத்திரமாகஇருப்பது தெரிந்ததும் Judeஇன் பெற்றோர் முதல் தூரத்து உறவினர்கள் அவரை மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

குழந்தையை தவற விட்ட தாத்தா நிம்மதி பெருமூச்சு விட, குழந்தை மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

ஒரு மூன்று வயது குழந்தை, அப்படி ஒரு பயங்கர காட்டுக்குள் எப்படி மூன்று நாட்கள் சமாளித்தானோ தெரியவில்லை.

தற்போது அவன் நலமாக இருக்கிறான், மருத்துவமனையில் தனக்கு பிடித்த டெடி பியர்பொம்மையுடன் அவன் உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.