பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி!


 இந்தியாவில் 9 பெண்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார். 32 வயதான இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி இவரது மனைவிகள் என கூறி 2 பெண்கள், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையரிடம் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் கொண்ட, அருண்குமார், பெண்களின் பின்னால் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவர்களிடம் சினிமா வசனங்கள் பேசி, அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை திருமணம் செய்தும் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்படி திருமணம் செய்த பெண்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு வாழ்ந்த பின், அவர்களை பாலியல் தொழிலுக்குள் கட்டாயப்படுத்தி தள்ளியுள்ளார்.

இதுவரை அருண்குமார் இப்படி 9 பெண்களை திருமணம் செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது விசாரணையில் தெரியவந்தது.

இதுமட்டுமின்றி, அருண்குமாருக்கு கஞ்சா கடத்தல் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்த பொலிசார், அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, துப்பாக்கி, வீச்சரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அருண்குமார் மீது புகார் கொடுத்த பெண்கள் 2 பேரும், அவரது முதல் மற்றும் 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.