விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் பொலிகண்டியில் மீட்பு!


யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிகண்டியில் உள்ள புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை இன்று (சனிக்கிழமை) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த, வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்வதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பாக கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.