பாரிஸ் மருத்துவமனை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

 


பாரிஸ் 16ஆம் நிர்வாகப் பிரிவில்(16e arrondissement)அமைந்துள்ள ஹென்றி டூனன்ட் (Henry Dunant) மருத்துவமனை முன்பாக இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார். இன்று பகல், 13.45 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த நபர் ஒருவர் அங்கு நடத் திய துப்பாக்கிச் சூட்டிலேயே தலையில் குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.


சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனை

முதலுதவியாளர்களால் சிகிச்சைக்கு உட்படுத்திய போது மரணமானார். சம்பவத்தில் மருத்துவமனையின் பெண் காவலர் ஒருவரும் காயமடைந்தார்.


தாக்குதலாளியைப் பொலீஸார் தேடிவரு கின்றனர். அப்பகுதி எங்கும் தீவிர சோத

னைகள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக் கான காரணம் தெரியவரவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம் பெற்ற குற்றச்செயலாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகப் பாதுகாப்பு அதி காரிகள் கூறியுள்ளனர்.


செஞ்சிலுவைச் சங்கத்தினால் இயக்கப் பட்டுவருகின்ற ஹென்றி டூனன்ட் மருத்

துவமனை தற்போது வைரஸ் தடுப்பூசி

ஏற்றும் மையமாக இயங்கி வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக

அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நில வியது.


(படம் :ஏஎப்பி ருவீற்றர் ஸ்கிரீன் ஷொட்)


குமாரதாஸன். பாரிஸ்.

12-04-2021

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.