பொலிஸ் விசாரணை ஆரம்பம்!தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த மோட்டார் வாகனம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞர்கள் மோட்டார் வாகனத்தின் ஜன்னல் வழியே அமர்ந்து கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தில் பயணித்தவர்களால் குறித்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, குறித்த மோட்டார் வாகனம் கண்டி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புகைப்படங்களுடன் முறைப்பாடொன்று பெருந்தெருக்கள் அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, குறித்த இளைஞர்கள் மற்றும் மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பெருந்தெருக்கள் அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.