ஷிவாங்கி நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்!

 


சமீபத்தில் முடிவடைந்த ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ என்ற திரைப்படத்தில் ஷிவாங்கி மற்றும் புகழ் இருவருமே நடித்து வருகிறார்கள் என்பதும் ஷிவாங்கி இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி ஷிவாங்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ட்டிகல் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஷிவாங்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் அவர் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.


இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.