'தளபதி 65' படப்பிடிப்பு - சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான ஸ்டில்!

 


தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அட்டகாசமான ஸ்டில் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நெல்சன் மற்றும் விஜய் இருக்கும் காட்சியும், பின்னணியில் படக்குழுவினர் பணி செய்து கொண்டிருக்கும் காட்சியும் உள்ளது. இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 3 வாரங்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்பி அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே இன்னும் ஒரு சில நாட்களில் ஜார்ஜியாவில் பட குழுவினருடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.