'மாஸ்டர்' நடிகரின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய விஜய்சேதுபதி!!

 


தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது


தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டரின் சிறுவயது கேரக்டரில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சமீபத்தில் கார் ஒன்றை வாங்கினார் என்பதும் அந்த காரின் சாவியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசியோடு பெற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது


இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் கார் வாங்கியதை கேள்விப்பட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரடியாக அவருடைய வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ’மாஸ்டர்’ மகேந்திரன் ’என்னோட பவானி’ என்று கூறி பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரனை விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து வாழ்த்து புகைப்படங்களும் அந்த ட்வீட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.