முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

 


மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழசை்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற பொலிஸார். அதனை கையளிப்பதற்கு மூன்று முறை சென்றப்போதும்,  அவர் இல்லாதமையினால் அவருடைய மனைவியிடம் கையளித்தப்போதும் அவரும் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.


இதனால் லவக்குமார் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட அவர்,  கடந்த 18 ஆம் திகதி 10 பேருடன் சென்று, நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


குறித்த நிகழ்வினை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் அறிந்த பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு இருந்தனர்.


இந்நிலையில் மீண்டும் அவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமைபொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போது, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.