அழியாயாமல் தொடருதே..!!

 


நூராமல் எரியுதே எங்கள் தேசம்

நூற்றாண்டாய் தொடருதே எங்கள் ஓலம்
ஆறாமல் போகுமா இந்த காயம்
அழியாயாமல் தொடருதே
சொந்த சோகம்.
மீண்டும் ஒருநாள் ஈழம்
எம்மைச் சேராதா
ஆண்டுகள் போனாலும்-எம்
அடிமை வாழ்வு தீராதா
பஞ்சமின்றி வாழ்ந்த இனம்
படுக்கையின்றி அலைகிறதே
தஞ்சைகட்டி ஆண்ட இனம்
தஞ்சம் கேட்டு தவிக்கிறதே
காலம் காலமாய் வாழ்ந்தோமே
கவலையின்றி நாம் ஆண்டோமே
ஈழம் என்றெண்ணி இருந்தோமே
இறுதியில் எல்லாம் இழந்தோமே
இரத்தமும் தசையும்
எங்கள் வாழ்வு ஆனதே
இருள்வதும் விடிவதும்
எல்லாம் ஒன்றாய் போனதே.
உலகம் வியக்க உயர்ந்த இனம் ஊமையாகிப் போனதுவே
இலவு காத்த கிளி போல
இறுதியில் எல்லாம் ஆனதுவே
அணைத்திடக் கைகள் இல்லையா
அன்னை பூமியில் எமக்கிடம் இல்லையா
தனித்தனியாக வாழ்கிறோம்-எமை
தாங்கிட சொந்தம் இல்லையா
ஊரை விட்டுப் பிரிந்தோமே
உறவை அங்கு புதைத்தோமே
உலக தேசம் எங்கும்
அலைந்தோமே
தெருநாய்கள் ஆகிப்போனோமே
கொடிகட்டிப் பறந்த கூட்டம்
கூடின்றித் தவிக்கிறதே
முடி வைத்து ஆண்ட கூட்டம்
முடியோடு வீழ்ந்ததுவே
அனைத்திடக் கைகள் இல்லையா-எம்
அழுகுரல் கேட்கவில்லையா
அடைக்கலம் தேடி திருகிறோம் நாம் அடிமைகளின் பிள்ளையா...?
த.யாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.