நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

 


நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது. 

தமிழீழ மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தமிழ் அமைப்புகள் நியூசிலாந்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் சகிதம் இந் நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு மற்றுமோர் நீதிக்குரலாக அமைந்திருந்தது .


நிகழ்வின் தொடக்கமாக தமிழ் இளையோர் அமைப்பின் தமிழின அழிப்பு ஓவிய கண்காட்சி உணர்வெழுச்சியுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 


இந்த உணர்வு பூர்வமான நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக முதலில் பொது சுடரினை நியூசிலாந்து தமிழ்  சங்கத் தலைவர் திரு சுந்தர்ராஜன் அவர்கள் ஒளிர்வித்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசிய கொடியானது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாடு அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழீழ தேசிய கொடியானது  மாவீரர் ஆர்த்தினி அவர்களின் தாயார் அவர்களால் அவர்களால் ஏற்றிவிக்கப்பட்டது. 


ஈகைசுடரினை லெப் கேணல் தங்கச்சியனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீத்த அனைவருக்காகவும் மலர் வணக்கமும்  தீபஞ்சலியும் செலுத்தப்பட்டது. 


நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழின அழிப்பு நாளினை தாங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. 


பின்னர் செல்வி சாருஜா சர்வேஸ்வரன் மற்றும் கிருத்திகா சுரேந்திரன் அவர்களால் 'முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்.....' என்ற பாடலுக்கு வலிகளை உணர்வாக்கிய நடனம் இடம்பெற்றது. 


தொடர்ந்து வைத்தியர் தேவா சிறிதரன் அவர்களின் உரை இடம்பெற்றது. ஈழவரலாற்றில் தமிழர்கள் எப்போதெல்லாம் ஒடுக்கபட்டார்கள் மற்றும் அழிக்கப்பட்டார்கள் என்பதினை மிகத்தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். இவரின் உரை அங்கு வருகை தந்திருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றிய சரியான ஒரு தெளிவை ஏற்படுத்தியிருந்தது என்றே கூறவேண்டும். 


பின்னர் தமிழின பேரவலத்தின் வலிகளை சுரேன், தருண் மற்றும் பிரசாந் ஆகியோர்  தம் கவிதை வரிகளால் வர்ணித்திருந்தார்கள். 


அடுத்து முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக  'காற்றின் காலடு ஓசை கேட்குது.....' எனும் பாடலுக்கு செல்வி லிஷானா ரொபின் அவர்களின் உணர்வு பூர்வமான நடனம் இடம்பெற்றது.


அடுத்து முக்கியமாக நியூசிலாந்தின் பசுமைக் கட்சியின்  பாராளுமன்றஉறுப்பினர்கள் கோல்ரிஸ் கறமன் மற்றும் ரிசாடு மெனன்டீஸ் மார்ச் ஆகியோரின் உரை இடம்பெற்றது. 


பின்னர் 2009 பேரவலத்தின் போது காயங்கள் தாங்கிய எம்மக்களின் சீவனை காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவுகூறப்பட்டது. 


பின்னர் நிகழ்வின் இறுதியாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு தயாகரன் தமிழீழ தேசியக்கொடியினை  இறக்கிவைத்தார். நியூசிலாந்து தேசிய கொடியினை பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் இறக்கி வைத்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.