வடக்கு அயர்லாந்தின் 25 முதல் 29 வயதுடையவர்கள் தடுப்பூசி பெற தகுதி!

 


வடக்கு அயர்லாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை பெற தகுதிபெற்றுள்ளனர்.

இது வடக்கு அயர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் ஆகும். இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் முன்பதிவு செய்யலாம்.

உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்பு முன்பதிவு வலைத்தளத்திலும், 0300 200 7813 என்ற தொலைபேசி மூலமாகவும் ஒன்லைனில் முன்பதிவு செய்ய நியமனங்கள் கிடைக்கின்றன.

தடுப்பூசி வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், வாரந்தோறும் சுமார் 20,000 இடங்கள் கிடைக்கும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வியாழனிலும் அடுத்த வாரங்களுக்கான கூடுதல் இடங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் வடக்கு அயர்லாந்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றதாகக் கூறப்பட்டது.

25-29 வயதுக்குட்பட்டவர்களுக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்க செய்தி என்றும் வடக்கு அயர்லாந்தில் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக வழங்குவதற்கான மேலதிக சான்று என்றும் வடக்கு அயர்லாந்தின் சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.