யாழில் இராணுவம்  மனித உரிமை மீறி கண்ணாணிக்கும் நடவடிக்கை!

 


யாழில் இராணுவத்தினர் ட்ரோன் கமரா வைத்து கண்காணிக்க ஆரம்பித்துள்ளார்கள். தென்பகுதியில் ஒரு சில இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிரவிட்ட பின்னர், தற்போது வடக்கில் இன்று யாழ்பபாணத்தில் ஆரம்பித்துள்ளார்கள். ஏனைய தென்பகுதி மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தவில்லை- 


 இது கொரோனாவை காரணம் காட்டி பாதுகாப்பு தரப்பு தமிழ் பிரதேசங்களை மனித உரிமை மீறி கண்ணாணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . இது சட்ட விரோதமானது பொது மக்கள் தடையை மீறி நடமாடினால் பிடிப்பதற்கு வேறு வழிமுறைகள் உண்டு.


 இவ்வளவு பெருந்தொகையான படையினரையும் காவல்துறையினரையும் குவித்து வைத்துக் கொண்டு அதைச் செய்ய முடியாதது கையாலாகாத்தனம் மாறாக டிரோன் கேமராக்கள் மூலம் மக்களது தனியுரிமையை மீறி இவ்வாறு படம் பிடித்தலானது அநாகரிகமான செயல் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் திறந்த கிணறுகளே குளியலுக்கு பயன்படுத்தப்படும். மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து உடனடியாக செயற்படவேண்டும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.