27 பேருக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு செல்ல தடை உத்தரவு!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான், மல்லாவி, ஐயன்கன்குளம், முள்ளியவளை ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களால் கோரப்பட்ட 27 பேருக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று தடையுத்தரவு வழங்கியுள்ளது.


இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிசாரால் .முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியசுரேஸ்.ஈஸ்வரி தமிழரசு கட்சி உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன்.விஜிந்தன், சமூக செயற்பாட்டாளர் ச.விமலேஸ்வரன் ஆகிய ஐந்து பேருக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு பொலிசாரால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன், கணபதிப்பிள்ளை விஜயகுமார் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான தவராசா கணேஸ்வரம்,சபாரத்னம் ஜெகநாதன்,தம்பையா யோகேஸ்வரன், ஜேசுதாஸ் பீற்றர்யூட் ,வேலு தியாகராசா ஆகிய ஒன்பது பேரிற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.   


மாங்குளம் பொலிசாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன், குஞ்சுதநாதன் ரவிந்திரன்,ராசமனி சிவராசா ஆகிய ஆறு பேரிற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


ஒட்டுசுட்டான் பொலிசாரால் சின்னத்துரை வேதவனம்,தர்மலிங்கம் ஜீவரத்னம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூன்று பேரிற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


ஐயன்கன்குளம் பொலிசாரால் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ரகுநாதன் சுயன்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன்,திலகநாதன் கிந்துஜன் ஆகிய ஐந்து பேரிற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


மல்லாவி பொலிசாரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமூக செயற்பாட்டாளர்களான தங்கராசா நிரஞ்சன் , ராசகுலசிங்கம் மாலுராசன்,லிங்கேஸ்வரன் வைலஜா ஆகிய ஐந்து பேரிற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


இதேவேளை முள்ளியவளை பொலிஸார் பெயர் குறிப்பிடாமல் தமது பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்ய தடையுத்தரவு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.