இந்திய உயர்ஸ்தானிகரிற்கு க.வி.விக்னேஸ்வரனின் அவசர கடிதம்

 


கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக  வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது என பிரதி யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன்   அவசரக் கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.



குறித்த கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வகையில் அதிகளவிலான கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில்  கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக எமது வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது. இவ் ஆபத்தான நிலமைபற்றி யாழ் இந்தியத் துணை தூதரகமும் நன்றாக அறிந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கை அரசால் தருவிக்கப்பட உள்ள சீன தடுப்பு ஊசிகளில் எவ்வளவு எம்மக்களுக்கு கிடைக்கும் என்று தெரியாது. இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசிடம் அவசரகோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் தடுப்பு ஊசிகள் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைபற்றியும் நாம் அவதானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் இவ்  ஆபத்தான நிலைமையில் இந்திய அரசின் சாத்தியமானளவு உதவிகளை பற்றாக்குறையாக உள்ள தடுப்பு ஊசிகள் சம்பந்தமாக எதிர்பார்த்துள்ளார்கள்.

தங்களிடமிருந்து சாதகமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.