மேலும் 42பேருக்கு கிளிநொச்சியில் கொரோனா தொற்று !!

 


கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சியில் இதுவரை 92பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர்.பரிசோதனை முடிவில் 42பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் அடையாளம் காணப்பட்டு,தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.