இன்று 44 கொவிட் மரணங்கள்

 


நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய முதல் தடவையாக இலங்கையில் ஒரே நாளில் 40 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவை பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும்.

அந்த வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் மன்னார் புளத்சிங்கள, ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும் 12 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.

அத்துடன் றாகம, காலி, பன்னிபிட்டிய, ஹோமாகம, அத்துருகிரிய, மத்துகம, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பயாகல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களில் அதிகமானோர் கொவிட் நியூமோனியா நிலை காரணமாக மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் 1,132 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.