மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

 


மேல்மாகாணத்தில் கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் ஸ்பாக்களில் நேற்றைய தினம் பொலிஸார் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 75 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.