8 சிறைக் கைதிகள் உட்பட 46 பேருக்கு மட்டக்களப்பில் ஒரே நாளில் தொற்று!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் சிறைக் கைதிகள் 8 பேர் உட்பட 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 1,833 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும்,


ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும். வவுணதீவு மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 பேர் வீதம் 4 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஏறாவூர் மற்றும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 3 பேர் வீதம் 6 பேர் உட்பட 46 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.  


இதேவேளை, இதுவரை 32,380 பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 22 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள்; வீட்டை விட்டு முடிந்தளவு வீதிக்கு வருவதை தவிர்துக்கொள்ளுமாறு என அவர் தெரிவித்தார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.