மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணம்!


யாழில் 12 வருடங்களாக மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவரே இவ்வாறு உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட மகன் கலந்து கொள்ள முடியாததால் உறவுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சம்பவத்தில் சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் வீதியை சேர்ந்த எஸ்.இராசவல்லவன் (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த இராசவல்லவன் தபோரூபன் (வயது 39) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கான வழக்கு இடம்பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகனின் விடுதலைக்காக இவர் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

மகனின் தண்டனைக்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடியவுள்ள நிலையில் தந்தையார் உயிரிழந்தமை உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருந்த  17 பேர் வரை உயிரிழந்துள்ளமை  குறிப்பிடதக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.