ஏஜிஎஸ் இன் உருக்கமான அறிக்கை!!

 


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமான செய்தி அனைவரின் மனதிலும் இடியாய் இறங்கியது. தமிழ் திரையுலகமே அவரது மறைவிற்கு அதிர்ச்சி அடைந்து அஞ்சலி செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கேவி ஆனந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் அவர்கள் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:


ஏஜிஎஸ்ஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை நாங்கள் இழந்து நிற்கிறோம். கேவி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும் மிகச்சிறந்த இயக்குனரும் ஆவார். முக்கியமான சமூக பிரச்சனைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர் ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்’ என்று கூறியுள்ளார்


ஏஜஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’மாற்றான்’, ‘அனேகன்’ மற்றும் ’கவண்’ ஆகிய படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.