வைரலாகும் அஜித்தின் பிறந்தநாள் புகைப்படம்!!

 


தல அஜித் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் ,  நேற்று அதிகாலை முதலே திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.


இந்த நிலையில் அஜீத் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தனது வீட்டில் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று 50வது பிறந்தநாள் என்ப்து சிறப்பு பிறந்தநாள் என்றாலும் அந்த பிறந்தநாளையும் அவர் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடிய  புகைப்படம் தற்போது  வெளியான நிலையில் அது  தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பதும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.