மேலும் 745 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கைது!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(செவ்வாய்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை மற்றும் மாகாணங்களுக்கிடையில் பயணித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை