கொள்ளையர்கள் 8 பேர் யாழில் கைது!!
யாழில் வீடொன்றில் நீண்ட நாட்களாக கொள்ளையிட்டு வந்த 8 பேர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 7 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளன. யாழ். வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் வீட்டை உறவினர் ஒருவர் பராமரித்து வந்துள்ளார்.
இந் நிலையில் அங்கு அடிக்கடி திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை