இரவுநேர களியாட்டம் - 25 பேர் கைது!!

 


கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொவிட் -19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் இரவு நேரகளியாட்ட நிகழ்வுகள் , விருந்துபசாரங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகளை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்று நிறுபம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இந்த சுற்று நிறுபத்திற்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனடிப்படையிலே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.