இது தான் நிஜம் - கட்டுரை!!

 


காதல் இல்லாமல் காமம் மட்டுமே இரு உடல்களை நீண்ட நாட்கள் கூடவே வைத்துக் கொள்ளாது... 

சலிப்படைந்ததும் வேறோர் உடல் தேடிச் சென்று விடும் காமம். காதலோடு  கூடிய காமம் மட்டுமே காலம் வரை கூடவே வாழ்கிறது. காமத்திற்கு இருக்கும் துடிப்பை விட காதலுக்கு இருக்கும் துடிப்பு மிக அதிகமானது. 

தனக்கானவன்/தனக்கானவளை என்றுமே கூடவே பற்றி வைத்துக் கொள்ள நினைக்கிறது. தன்னை விட பிறிதொருவரோடு பேசினாலோ அன்பை பகிர்ந்தாலோ தன் மேல் அன்பு குறைந்து விட்டதோ என நினைத்து உள்ளே மருகிகொள்ளும் காதலின் வலியை  உடல் மோகம் உணர்வதில்லை. 

தான் கூடவே இருக்கும் போது பிறிதொருத்தியின்  தேடலை காதல் அனுமதிப்பதேயில்லை. 

நீ எவனோடும் எவளோடும் என்ன வேணா செய்து கொள்ளலாம். என கூறுவதெல்லாம் தான் எவனோடும் எவளோடும் எது வேணா செய்து கொள்வேன். 

அதை நீ கூடவே இருந்து சகித்து கொண்டிரு என்பதற்கான மறைமுக அனுமதியே இந்த காதலுக்கு மெர்ச்சூரிட்டியாக நடந்து கொள்ள தெரியாததால் அது குழந்தைதனமாகவே வாழ்ந்து விடுகிறது.

 அது அறிவிலி தான் தனக்கானதை யாருக்கும் விட்டு தர முயல்வதுமில்லை. தனக்கு உரிமையில்லாததை தொட்டு கொள்ள முயல்வதுமில்லை. எத்தனை அழகான முகங்கள் தாண்டிச் சென்றாலும் அது தனக்கான அன்பான இதயத்தை தேடிக் கொண்டிருக்கும்.

தனக்கானவன் வேறொருத்தியை தேடி போகிறான் என தெரிந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் விட இந்த காதலுக்கு மாத்திரமே தெரியும். காமம் அதை எல்லாம் கடந்து போகக்கூடியது. தன்னை விட வேறொருத்தியை அவன் தேடினான் என்பது தெரிய வரும் போது நான் என்ன குறை வைத்தேன் என பதறித்துடிக்கும் வலி காதலுக்கு மட்டுமே இருக்கும். 

ஏன் என்றால் அது அறிவிலி காமத்தை போல கடந்து போக தெரியாததது. அடித்தவன் பின்னாலே அலையும் குழந்தை போன்றது காதல். அதற்கு பதறித்துடிப்பதை விட வேறு வழி தெரிவதுமில்லை. 

காமம் எத்தனை உடல்களில் கிடைத்தாலும் உண்மை காதல் ஓர் உன்னதமான இதயத்திடமே கிடைக்கும். அதை உடைக்காமல் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். 

கடைசி காலத்தில் காமம் இருக்கபோவதில்லை. 

கண்ணீர் வடிக்கும் நேரத்தில் காதலால் மட்டுமே அதை ஏந்திக் கொள்ள முடியும். அற்பமாக கிடைக்கும் சில்லறைதனமான காமத்திற்காக உங்கள் உன்னதமான காதலை இழந்து விடாதீர்கள். மீண்டும் ஓர் காதல் அதே போல பொருந்திப்போகாது. 


பிரியா நடேசன்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.