முஸ்லிம் இராணுவ அதிகாரி கிழக்கு மாகாணத்தின் முக்கிய பதவியில்!!

 


இலங்கை இராணுவப்படையில் சேவையாற்றும் லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹ்மத் நியமனம்.


கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் ஏழு பேரைக் கொண்ட விசேட கொரோனா செயலணியொன்று மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா இடர்நிலை தொடர்பில் பொதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த செயலணி நியமிக்கப்பட்டது.


இதில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் உள்ளடக்கப்படாமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் புதன்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் "குறித்த செயலணியில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த அனஸ் அஹமட் என்பவரை நியமித்துள்ளதாக கிழக்கு ஆளுநரின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.